PSSC – PARAPARAM SPIRITUAL SCIENCE CURRICULUM
பரம[தன்]னை அறியும் பாடங்கள்
உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கின்றது.
குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு,
குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம:
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை யென்றுணர்வீர்கள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லார் நெஞ்சத்து காண ஒண்ணாதே.
– திருமந்திரம்.
பராபரம் ஆன்மவியல் கல்விப் பாடத்திட்டம்
Paraparam Spiritual Science Curriculum – PSSC
[Digital Gurukulam]
முதல் Batch – மாணவர் சேர்க்கை
“வாழ்க்கையை அறிந்து • மனதைப் புரிந்து • தன்னை உணரும் கல்விப் பயணம்”
இன்றைய கல்வி நமக்கு தொழில், அறிவு மற்றும் வாழ்க்கையை நடத்துவதற்கான பல்வேறு திறன்களை வழங்குகிறது.
ஆனால், அந்த கல்வி திட்டங்களில் மனிதன் மகிழ்ச்சியாக வாழும் வழி கற்றுக் கொடுப்பது இல்லை. மகிழ்ச்சி என்பது, வெளிப் பொருட்களில் இல்லை. அது நம் உள்ளத்தில் உள்ளது என்பதை உணரும் உயரிய அத்யாத்ம ஞானக் கல்வி இங்கு கற்றுக் கொடுக்கப் படுகிறது.
PSSC SYLLUBUS
SCHOOL OF LIFE EDUCATION
LEVEL 01
வாழ்க்கை நோக்கு
↓
LEVEL 02
சுய அடையாளம்
↓
LEVEL 03
வாழ்க்கை மதிப்புகள்
↓
LEVEL 04
உறவுகள்
↓
LEVEL 05
வாழ்க்கை நோக்கம் & தேர்வுகள்
↓
LEVEL 06
ஆசை & பற்று
↓
LEVEL 07
மாற்றம் & நிலையாமை
↓
LEVEL 08
கடமை & பற்றின்மை
↓
LEVEL 09
விழிப்புணர்வுடன் வாழ்தல்
↓
SCHOOL OF MIND EDUCATION
↓
LEVEL 10
மனத்தை அறிதல்
↓
LEVEL 11
எண்ணங்களை அறிதல்
↓
LEVEL 12
உணர்ச்சிகளை அறிதல்
↓
LEVEL 13
வாசனை & மனப்பதிவு
↓
LEVEL 14
மனச்செம்மை & சுயக்கட்டுப்பாடு
↓
LEVEL 15
புலனிலிருந்து உள்நோக்கி
↓
LEVEL 16
மன ஒருமுகம்
↓
LEVEL 17
சாட்சி உணர்வு & சுயவிசாரணை
↓
LEVEL 18
ஞானத்திற்கான தகுதி
↓
SCHOOL OF SPIRITUAL SCIENCE
↓
வேதாந்த சாஸ்திரப் பயணம்.
இதனால் ஒவ்வொரு Module-லும்: –
வாழ்க்கையைச் சீரமைத்தல் → உள்ளத்தைச் செம்மைப்படுத்தல் → அறிவைத் தெளிவுபடுத்தல் → புலனறிவை உள்நோக்கித் திருப்புதல் → மனத்தை ஒருமுகப்படுத்தல் → சுயவிசாரணை → ஞானத்தில் நிலைபெறுதல்.
- நான் ஏன் வாழ்கிறேன்?
- வாழ்க்கை என்றால் என்ன?
- மனதில் ஏன் குழப்பம் ஏற்படுகிறது?
- மகிழ்ச்சி என்றால் என்ன?
- உறவுகளில் ஏன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன?
- மன அமைதியை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
- இறுதியாக — “நான் யார்?”
என்ற கேள்விகளுக்கான ஆழமான கல்வி எங்கே கிடைக்கும்?
இந்தக் கேள்விகளிலிருந்து தொடங்கி, வாழ்க்கையைப் புரிந்துக்கொண்டு, மனதை அறிந்து, படிப்படியாக தன்னை அறியும் ஆன்மவியல் பயணத்திற்கு மாணவர்களைத் தயார் படுத்தும் உயரிய நோக்கத்துடன் இந்த “பாராபரம் ஆன்மவியல் பாடத்திட்டங்கள்” (PSSC) உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கல்வி ஒரு மதப் பிரசாரம் அல்ல.
- இந்த கல்வி ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியும் அல்ல.
- இந்த கல்வி மனித வாழ்க்கையையும், மனதையும், இறுதியில் தன்னையும் ஆராய்ந்து அறிய உதவும், ஒரு படிப்படியான புத்திக் கூர்மைக்கான கல்விப் பயணம்.
கல்விப் பிரிவு – 3
School of Spiritual Science (“நான் யார்?”)
Vedanta • Upanishads • Bhagavad Gita • Panchadasi • Guru Gita • Self Knowledge
இந்த மூன்றாம் நிலை கல்விப் பிரிவில், தன்னை அறியும் அறிவு மற்றும் “ நான் யார்” என்ற விசாரணை வளர்க்கும் கல்வி.
கல்விப் பிரிவு – 4
School of Teaching (ஆசிரியர் பயிற்சி)
இந்த நான்காம் நிலை கல்விப் பிரிவில், அத்யாத்ம ஞானப் பாடங்களுக்கான ஆசிரியர் பயிற்சி அளித்தல்.
கல்விப் பிரிவு – 5
School of Research (வேதம் மற்றும் உபநிடதங்கள்)
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி
ஒவ்வொரு Level-லும்:
✓ PDF பாடநூல்
✓ Audio Book
✓ Live Online Class
✓ Workbook
✓ Study Notes
✓ Q&A Session
✓ Monthly Assessment
✓ Level Completion Certificate வழங்கப்படும்.
வகுப்புகள் எவ்வாறு நடைபெறும்?
முழுமையாக இணையவழி Digital Gurukulam மட்டுமே.
இதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வாரத்திற்கு ஒரு Live Class என ஆசிரியரின் நேரடி வகுப்புகளாக, மாலை 6.30 – 8.00 மணி வரை என 1.30 மணி நேரம் வகுப்புகள் இருக்கும்.
⏱ 90–120 நிமிடங்கள் கூட சில சில நாட்களில் சில வகுப்புகள் இருக்கும்.
இந்த வகுப்புகள் வாயிலாக, 1 அல்லது 2 மணி நேரம், வாரம் ஒரு நாள் மட்டுமே கற்றுக் கொடுக்கின்ற இணையதள நேரடி பாடங்களை, மாணவர்கள் அந்த வாரம் முழுவதும் Practical Life நடைமுறையில் கொண்டு வந்து, வடிவமைக்கப்பட்ட பாடங்களின் PDF பாடநூல், Audio Book போன்றவைகள் வாயிலாக, தினசரி நேரடி பயிற்சிகள் பெற வேண்டும்.
இதற்காக கொடுக்கப்பட்ட பாடங்களை ஆன்லைன் Workbook மூலம் எழுதி, நடைமுறையில் கொண்டு வரவேண்டும்.
ஒரு Level = 16 வாரங்கள் / 4 மாதங்கள்.
ஒவ்வொரு மாதமும் 4 Live Classes மற்றும் Monthly Assessment நடைபெறும்.
கல்விக் கட்டணம்
கல்விப் பிரிவு – 1
₹720 / மாதம்
கல்விப் பிரிவு – 2
₹720 / மாதம்
இந்த இரண்டு கல்விப் பிரிவுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.
இரண்டு கல்விப் பிரிவுகளும் மொத்தம் 36 மாதங்கள் (3 வருடங்கள்) நடைப்பெறும்.
கல்விப் பிரிவு – 3 முதல் 5 வரை, கட்டாயக் கல்விக்கட்டணம் இல்லை.
மாணவர்கள் தங்கள் விருப்பம்போல, அவர்களால் இயன்ற குரு தட்சணை வழங்கலாம்.
யார் சேரலாம்?
இந்த ஆன்மவியல் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான வயது வரம்பு என்பது, 18 வயது முதல் 75 வயது வரை இருக்கலாம்.
இதில் ஆண் – பெண் என இருபாலரும் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
இது முழுமையான Digital Gurukulam என்பதால், இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள Android Smartphone அவசியம்.
முதல் Batch
மாணவர்கள் முதல் பேட்ஜ் சேர்க்கை நிறைவடைந்தது.
அடுத்த, இரண்டாவது பேட்ஜ் தொடங்கும் போது, அறிவிப்பு இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
பொதுவாக, ஒவ்வொரு பேட்ஜ் தொடங்கி. சரியாக 4 மாதங்கள் கழித்து மட்டுமே, அடுத்த பேட்ஜ் தொடங்கப்படும்.
இடையில் நின்ற மாணவர்கள் அடுத்த பேட்சில் மட்டுமே மீண்டும் சேர முடியும்.
இதில் மாதா மாதம் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத, பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கு Scholarship / Sponsored Learning திட்டம் உள்ளது.
இதற்கான விபரங்கள் பெற விரும்பும் பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் எங்களது PSSC Academic Service Team Members வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
PSSC – Academic Team Members
Team Leader 1 – G. KALYANI.
Academic Service Coordination
Contact Mobile: – 9361222944.
Team Member 2 – J. S. Ganeshraj.
Student Academic Orientation
Contact Mobile: – 7598557554.
Team Member 3 – A. Natarajan.
Student Academic Orientation
Contact Mobile: – 9600693649.
Team Member 4 – V. Nagalekshmi.
Student Communication & Follow-up Coordination
Contact Mobile: – 8248560172.
Team Member 5 – Sakunthala. M
Learning Materials Coordination
Contact Mobile: – 94439 39772.
Team Member 6 – Baskar L
Workbook & Assignments Coordination
Contact Mobile: – 9884300712.
Team Member 7 – Jeevakumari
Q&A Coordination
Contact Mobile: – 9443148699.
Team Member 8 – Gajalakshmi Mohan Pradeep
Live Class Coordination
Contact Mobile: – 9003771356.
Team Member 9 – Mythili Eswaravelu
Attendance & Student Progress Coordination
Contact Mobile: – 9786892225.
Team Member 10 – Kasthuri
Scholarship & Sponsorship Coordination
Contact Mobile: – 9514881051.
Team Member 11 – Saravanan E
Digital Support Coordination
Contact Mobile: – 9087108585.
ஒரு முக்கியமான உறுதி
- இந்தக் கல்வி ஒரு போட்டி அல்ல.
- ஒரு பட்டம் பெறுவதற்கான முயற்சியும் அல்ல.
- வெளிப்புற வெற்றியை மட்டும் நோக்கிய கல்வியும் அல்ல.
ஒரு மனிதன் தனது வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அவனது மனதை உயர்பரிமாண அறிவு நிலைக்கு மேம்படுத்திக் கொள்ளவும், இறுதியில் தன்னை அறிந்துக் கொள்ளவும் விரும்பும், ஒவ்வொருவருக்குமான கல்விப் பயணம் இது.
நன்றி
ஓம் தத் ஸத்
பராபரம் பாடசாலை
Paraparam Spiritual Science Curriculum (PSSC)
Digital Gurukulam – Paraparam Patasala
ஹரி ஓம்
அனைவருக்கும் வணக்கம்,
வேதாந்த பாடங்கள் வருகின்ற (02.10.2025) வியாழக்கிழமை முதல் வாரந்தோறும், திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை அரட்டை ஆப் மூலம் (Arattai App) இணையதள வகுப்புகளாக நடைப்பெறுகிறது.
இது இணையதள குருகுலக் கல்வி என்பதினால், இந்த வேதாந்த வகுப்புக்கு உண்டான “படிவம்” பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ‘பராபரம் பாடசாலை’ குழுவில் இணையக்கூடிய இணைப்பு லின்க் வழங்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் “பராபரம் பாடசாலை (Arattai App) குழுவின்” மூலம் மட்டுமே நடைப்பெறும்.
இந்த பாடசாலையில் கலந்துக் கொள்ள கீழே உள்ள இணைப்பு லின்க்கை பயன் படுத்திக் கொள்ளலாம்.
Paraparam Paasala Registration Form
ஆன்லைன் வகுப்புகள் நடைப்பெறும் விபரம் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
ஆன்மவியல் (அத்யாத்ம ஞானம்) பாடங்கள் பற்றிய சந்தேகங்கள் கேட்க விரும்புபவர்கள் இதே இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இமெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி!
ஓம் தத் ஸத்
